இஸ்ரோ வேலை வாய்ப்பு அறிவிப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!
தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி இஸ்ரோ- விண்வெளி பயன்பாட்டு மையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Technician-B பணிகளுக்கென 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
நிறுவனம்:
இஸ்ரோ- விண்வெளி பயன்பாட்டு மையம்
பணியின் பெயர்:
Technician-B
காலி பணியிடங்கள்:
Technician-B பணிகளுக்கென 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
வயதுவரம்பு:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்ச 35 வரை இருக்க வேண்டும் என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சமாக ரூ.69,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் Written test and / Skill test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்த படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
21.08.2023
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_August/ADVT_SAC_03_2023_01Aug2023.pdf