இனி ரேஷன் கடைகளில் இது இல்லை!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று தான் ரேஷன் அட்டை. இதன் மூலமாக மக்கள் ஏராளமான சலுகைகளை அரசிடம் இருந்து பெற்று வருகின்றனர்.
மேலும், இப்போது இருக்கும் சூழலில் விலைவாசி உயர்வால் மளிகை பொருட்களும், காய்கறிகளில் தக்காளியும் தற்போது ரேஷனிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா காலங்களில் வடமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், தான் மத்திய அரசு இந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் மூலமாக மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷனில் தரக்கூடிய இலவச பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். எனவே, சொந்த மாநிலத்தை விட்டு வெளி ஊர்களில் வசிப்பவர்கள் சுலபமாக உணவு பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் கட்டாயமாக ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆப் சேல் சாதனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் எந்த ஒரு ஏமாற்று நிகழ்வும் நடக்காமல் இருப்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, இனி மக்களுக்கு ரேஷனில் வழங்கக்கூடிய பொருட்களில் எந்த குறைவும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது, அனைத்து ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இதற்காக விரல் ரேகை பதிவு செய்யும் பணிகளும் வருகிற 20 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால், ஒரே ரேஷன் ஒரே அட்டை திட்டத்தில் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த முடியாது.
இதன் காரணமாக இந்த திட்டமானது அரசால் சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உதவி தொகை பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் இந்த திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரேஷன் அட்டையில் உள்ள முகவரிக்கென்று இருக்கின்ற கடையில் மட்டுமே பொருட்களை பெற முடியும் என்று அறிவித்துள்ளது.