இந்த மெகா ஹிட் படம் வந்து அதுக்குள்ளே பத்து வருஷம் ஆச்சா..?
என்னதான் நடிகர்கள் மாங்கு மாங்குவென்று தங்களது உழைப்பைக் கொட்டி நடித்தாலும் அவர்களது கேரியரை உச்சத்துக்கு கொண்டு செல்ல சில படங்கள் வந்து அமைய வேண்டும். அப்படியான ஒரு படம்தான் ‘மகதீரா’.

ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால், தேவ் கில், ஸ்ரீஹரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘மகதீரா’. ஜூலை 30, 2009-ல் இந்தப் படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.
தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் படம் வரவேற்பைப் பெற்றது. பெங்காலியில் இந்தப் படம் ‘யோதா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தி ரீமேக் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இன்றுவரை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், ‘மகதீரா’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி படக்குழுவினர் பலரும் தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்த காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதற்குள் ‘மகதீரா’ வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படத்தில் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் செறிவூட்டுவதாக இருந்தது.
எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கமாக இருந்து வருவதற்கு நன்றி ராஜமௌலி சார். உங்களிடமிருந்து கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் தொழில் நெறிமுறைகளை மனதாரக் கடைபிடிக்கிறேன்.
ராம்சரண், நமது குழந்தைப் பருவத்தில் ஒரு பகுதியை நாம் பகிர்ந்து கொண்டது போல இருக்கிறது. அற்புதமான தருணங்களை நினைவுகூர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால். அதுக்குள்ளே பத்து வருஷம் ஓடிடுச்சா..?
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.