இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது போட்டியில் நான்காவது நாளாக விளையாடி வரும் நிலையில் இன்றைய போட்டி முடிவடைந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா இணை சிறப்பாக விளையாடி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது. எனினும் இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத காரணம் மற்றும் மழை காரணமாக வெற்றி பெரும் வாய்ப்பை தவறவிட்டது. ஆனால் இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
இந்த மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ரன் சேர்த்தனர். இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளிலும் ஜடேஜா இடம்பெறவில்லை. இந்த போட்டியில் இடம்பெற்று 77 ரன்கள் சேர்த்தார். இதனை ரசிகர்கள் பலரும் இவரை என் இரண்டு போட்டிகளில் பயன்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பி வருவது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.