இவர்தான் நம்பர் 1 சும்மா இருப்பாரா??..பேட்டிங்கில் பட்டையை கிளப்பும் ஜடேஜா!! இந்திய அணியின் திட்டம் பலித்ததா??

0
118
Jadeja, who shakes the batting

cricket: இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தல் . இந்திய அணி திட்டம் போட்டு கொண்டு வந்த பிளேயிங் லெவன்.

இந்திய அணி கப்பா மைதானத்தில் தராது 4 வது நாளாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களில் மழையினால் தடைபட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற சமநிலையில் உள்ளது. மேலும் இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் சேர்த்த நிலையில் இந்திய அணி முக்கிய வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். இந்திய அணி தொடக்க வீரர் கே எல் ராகுல் தனியாக போராடிய போது களமிறங்கிய ஜடேஜா இணை நன்றாக ரன் சேர்த்தது. ஆஸ்திரேலியா வீரர் நேதன் லயன் வீசிய பந்தில் அவுட் ஆனார் கே எல் ராகுல். தொடர்ந்து விளையாடி வரும் ஜடேஜா அரைசதம் விளாசினார். முதல் இரண்டு போட்டிகளில் ஜடேஜா இடம்பெறவில்லை. ஐசிசி வெளியிட்ட ஆல்ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.