cricket: இந்திய அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெயஷ்வாளுக்கு ஆட்டம் காட்டிய மிட்செல் ஸ்டார்க்.
இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்ற னியாளியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது.
இரண்டாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர். முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தார்.
முதல் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் ஸ்டார்க் வீசிய பந்தை எதிர்கொண்ட பின் உங்கள் பந்து ரொம்ப ஸ்லோவாக வருகிறது என்று கிண்டல் செய்தார். அதற்கு பதிலடியாக இரண்டாவது போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.
இரண்டாவது பொட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 42 ரன்களும் கே எல் ராகுல் 37 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 127 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.,.ல்;