Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம்! இனி ஐபிஎல் டி20 காண பணம் செலுத்த வேண்டாம் முற்றிலும் இலவசம்!

Jio's new plan! No more paying to watch IPL T20 completely free!

Jio's new plan! No more paying to watch IPL T20 completely free!

ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம்! இனி ஐபிஎல் டி20 காண பணம் செலுத்த வேண்டாம் முற்றிலும் இலவசம்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட்  தொடரின் உரிமைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்தது.இதனுடைய டிஜிட்டல் உரிமைகளும் ஹாட்ஸ்டார் நிறுவனத்தினம் இருந்தது.ஆனால் தற்போது இந்த 2023 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உட்பட்ட வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றியது.குறிப்பாக மொத்தம் ரூ 20,500 கோடி செலவு செய்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து பெற்றுள்ளது.

மேலும் கடந்த ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஹாட்ஸ்டார் செயலியில் மட்டுமே பார்க்க முடியும் என்ற சூழல் இருந்து.அவ்வாறு காண்பதற்கும் குறிப்பிட்ட பணம் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. இதன் காரணமாகவே பல ரசிகர்கள் போட்டியை நேரிலையில் பார்க்க முடியாமல் மறுநாள் ஹைலைட்ஸுகளை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுச்சென்றுள்ளனர்.

ஆனால் அதனை வியாகாம் நிறுவனம் ரசிகர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளது.அதற்கு ஜியோ செயலி மூலம் இனி இலவசமாக எப்போது வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டியை நேரலையாக ரசிகர்கள் காணலாம்.மேலும் இவை தமிழ்,போஜ்பூரி உள்ளிட்ட 11 மொழிகளில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹாட்ஸ்டார் நிறுவனத்தை விட அதிக கோடிகளை  குவித்து உரிமையை பெற்றுவிட்டு எதற்காக இலவசமாக கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் மத்தில் சந்தேகங்கள் எழும் ஆனால் ஜியோ நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை வைத்துள்ளது.ஜியோ நிறுவனம் தற்போது தன்னுடைய செயலியை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.அதனால் நாடுமுழுவதும் உள்ள கிரிகெட் ரசிகர்களை கவர திட்டமிட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டில் ஐபிஎல் தொடரின் மூலமாக 50 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ டிவி செயலிக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.அதற்காக தான் இந்த இலவச திட்டம் என கூறப்படுகின்றது.முதலில் குறைந்த அளிவிலான லாபத்தில் வாடிக்கையாளர்களை கவர்ந்து விட்டால் அதன்பிறகு அதிகளவு லாபம் ஈட்டலாம் என திட்டமிட்டுள்ளது.

Exit mobile version