ஜூனியர் உலக கோப்பை போட்டி; வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா!

0
132

ஜூனியர் உலக கோப்பை காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 37.1 ஓவர்களில் 111 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மெஹரோப் அதிகமாக 30 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் ரவிகுமார் 3 விக்கெட்டும், விக்கி ஓஸ்ட்வல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்ஷி பொறுப்புடன் ஆடி 44 ரன்னில் அவுட்டானார். ஷேக் ரஷீத் 26 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், கேப்டன் யாஷ் தல் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. யாஷ் தல் 20 ரன்னுடனும், கவுஷல் தாம்பே 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்காளதேசம் சார்பில் ரிப்பன் மண்டல் 4 விக்கெட் வீழ்த்தினார்.