சற்றுமுன்: 3 5 8 வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு.. பொன்முடியின் அடுத்த அதிரடி!! தயாராகும் மாநில கல்வி கொள்கை!!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்த மாணவிகளுக்கு மொழி குறித்தும் கல்விக் கொள்கை குறித்தும் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, மாணவர் மாணவிகள் அனைவரும் கட்டாயம் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர பிற மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்த மொழிகளைப் படிப்பதற்கே சிரமமாக இருக்கும் சூழலில் மற்ற மொழிகள் கட்டாயமாக்குவது தவிர்க்கப்படுவது நல்லது.மாணவர் மாணவிகள் விருப்ப பேரில் வேண்டுமானால் இதர மொழிகளை கற்றுக் கொள்ளலாம். தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்தாலே மற்ற நாடுகளுக்கு செல்லும் பொழுது உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அண்ணாவின் வழியிலேயே தற்பொழுது கல்வி கொள்கையை உருவாக்கி உள்ளார். அதனை மையப்படுத்தி தான் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக புதிய கல்விக் கொள்கை என்ற அடிப்படையில் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு உள்ளிட்டவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்தால் அடுத்த வகுப்பிற்கு அவர்களால் எப்படி செல்ல முடியும்.
இது முற்றிலும் தவறான கல்விக் கொள்கை என கூறினார். அதுமட்டுமின்றி வரும் நாட்களில் இந்த புதிய கல்விக் கொள்கையில் பி ஏ, பி எஸ் சி படிப்புகள் படிப்பதற்கு கூட மாணவர் மாணவிகள் கட்டாயம் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்று கூறியுள்ளனர். தற்பொழுது நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக கொள்கையாக வைத்துள்ள நிலையில் அடுத்த நுழைவுத் தேர்வு எப்படி ஒப்புக்கொள்ள முடியம். 52% பெற்று தமிழ்நாடானது இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ள நிலையில் இவ்வாறான புதிய கல்விக் கொள்கை வந்தால் பின்னடைவை தான் சந்திப்போம்.
தற்பொழுது இந்தியாவிலேயே முதலிடம் தமிழகம் வகிக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் திமுகவின் திராவிட மாடல்தான் எனக் கூறினார். நாங்கள் படிக்கும் பொழுதெல்லாம் ஒரு வகுப்பிற்கு ஒரு பெண் என்று இருந்த நிலையில் தற்போது எண்ணற்ற பெண்கள் படிக்க முன் வந்துவிட்டனர். அவர்களுக்கு ஆதரவு வகிக்கும் நிலையில்தான் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனவே மாணவிகள் தங்களின் உயர்கல்வி படிப்பை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.