சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த பரபரப்பு!! திமுக அதிமுக இரண்டிற்கும் அதிரடி சீல்!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா உயிரிழப்பிற்கு பிறகு தற்பொழுது இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற போவதை ஒட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
ஆளும் கட்சி ஆனது இதில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தன்னிச்சை வேட்பாளரை நிறுத்தாமல் கூட்டணி கட்சியுடன் கைகோர்த்துள்ளது.
அதேபோல அதிமுக வாக்குகள் ஏதும் சிதறாமல் முழுமையாக களத்தில் இறங்கி உள்ளது, ஏனென்றால், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அவர்கள் தனித்தனியாக போட்டியிடும் பட்சத்தில் அதிமுக வாக்குகள் அனைத்தும் சிதறக்கூடும் அவ்வாறு ஏதும் இந்த தேர்தலில் நடைபெறாததால் முழு வாக்குகள் அதிமுகவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஆளும் கட்சியானது தங்களது ஆதிக்கத்தை பெருமளவு இந்த தேர்தலில் காட்டுவதாக தொடர்ந்து அதிமுக குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இருவர் மீதும் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களில் உள்ள நிலையில் திமுக அனுமதியின்றி பத்துக்கும் மேற்பட்ட பணிமனைகளை வைத்துள்ளனர். அதேபோல அதிமுகவும் அனுமதி இன்றி மூன்றுக்கும் மேற்பட்ட பணிமனைகளை வைத்துள்ளனர்.
இவ்வாறு பணிமனைகள் வைத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுத்ததை அடுத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் திமுக அனுமதி இன்றி வைக்கப்பட்ட பணிமனைகளுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக சீல் வைத்தது.
அவ்வாறு பணிமனைகளுக்கு சீல் வைக்கும் பொழுது அதிமுகவினர் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்னும் வேறு எந்தெந்த கட்சியினர் இதுபோல அனுமதி இன்றி பணிமனைகளை வைத்துள்ளனர் என்பது குறித்து தேர்தல் ஆணையம் சோதனை செய்து வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இன்றும் தெரிவித்துள்ளனர்.