முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்!! இதை மட்டும் செய்யுங்கள்!!
பொதுவாக முகத்தில் எண்ணெய் பசை உடையவர்களுக்கு அதிக அளவில் பருக்கள் வரும். ஏனென்றால் அவர்களது முகத்தில் உள்ள எண்ணெய் பசை தான் அதற்கு காரணம் ஏன் என்றால் அந்த எண்ணெய் பசையில் தூசிகள் படிந்து பருக்களை உண்டாக்கும். பருக்கள் வருவதுடன் அது நமது முகப்பொலிவையும் குறைத்து விடும்..
இந்த பருக்களை குறைப்பதற்கான மூன்று வழிகளை நாம் செய்து வந்தால் போதும் கூடிய விரைவில் பருக்கள் சரியாகிவிடும்.
செயல்முறை 1- ஸ்ட்ரீமிங்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை , மஞ்சள் பொடி போட்டப் பின் கற்றாழையை சிறியதாக நறுக்கி பாத்திரத்தில் போடவும்.
தண்ணீரை சுமார் ஐந்து அல்லது ஏழு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
நீராவி வெளியே போகாத அளவுக்கு பாத்திரத்தை மூட வேண்டும்.
ஸ்ட்ரீமிங் பண்ணும் போது நமது முகத்தில் நிராவி பட்டு முகத்தில் வேர்வை வரும், அப்போது முகத்தில் சீரம் பாதுகாப்பு இருக்கும் .
சீரம் பாதுகாப்பு இருக்கும் போது முகத்தில் எண்ணெய்
வடியும் இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் ஸ்ட்ரீமிங் பண்ணும் போது சரியாகிடும்.
எண்ணெய் வடிவது குறைந்தாலே பருக்கள் வராது.
ஸ்ட்ரீமிங் பண்ணும் போது பருக்கள் பட்டு போகும். முகம் பொலிவுடன் காணப்படும்.
ஸ்ட்ரீமிங் பண்ணவுடன் முகத்தில் ஃபேஸ் பேக் போடவும்.
செயல்முறை 2 -ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக் தயாரிப்பு
விரலிமஞ்சள் மற்றும் வேப்பிலையை அறைத்து அதனை முகத்தில் தடவி விடவும்.
இந்த ஃபேஸ் பேக் முகத்தில் இருக்கும் பருவை தடுக்கும், வராமலும் தடுக்கும்.
செயல்முறை 3 – முகம் கழுவுதல்
ஸ்ட்ரீமிங் தண்ணீரில் முகத்தை நான்கு முறையாவது கழுவவும்.
எண்ணெய் பொருட்களை சாப்பிட பின் தண்ணீர் குடிக்கவும்.
இந்த மூன்று முறைகளையும் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.
இவற்றை நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தாலே உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் முழுவதும் நீங்கி அதிக முகப்பொலிவுடன் தோற்றமளிப்பீர்கள்.