Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்திய வீரர்… வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விலகல்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு இந்திய வீரர்… வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விலகல்?

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான கே எல் ராகுல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ள அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் சிகிச்சையில் குணமான அவர் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இப்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்திய அணியில் கோலி, ரோஹித் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கே எல் ராகுலின் விலகலால் இந்திய அணியின் மேலும் பலவீனமடைந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முன்னாள் கேப்டன் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கே எல் ராகுலின் திருமணம் பற்றிய தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. கே எல் ராகுல் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version