Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கே எல் ராகுலுக்கு பிசிசிஐ விதித்த கெடு…  ஆசியக் கோப்பையில் விளையாடுவாரா?

கே எல் ராகுலுக்கு பிசிசிஐ விதித்த கெடு…  ஆசியக் கோப்பையில் விளையாடுவாரா?

கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இதற்கிடையில் சிகிச்சையில் குணமான அவர் அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அப்போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இதையடுத்து ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் ராகுல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் முழு உடல் தகுதிப் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக செய்துகொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் தேறி வரும் அவர் இப்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இன்னும் ஒரு வாரத்தில் அவர் உடல்தகுதி தேர்வில் கலந்துகொள்ள உள்ளார். அதில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசியக்கோப்பையில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் தேர்ச்சி பெறாவிட்டால் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பின்னடைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Exit mobile version