இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பிரபல வீராங்கனை மிதாலி ராஜ் உள்ளிட்ட 11 பேருக்கு கேல்ரத்னா விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் 11 பேருக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் உள்ளிட்ட, ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகியோருக்கு கேல் ரத்னா விருதும்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜுனா விருதும் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்காக தேசிய விளையாட்டு விருதுகள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 11 வீரர்கள்.
நீரஜ் சோப்ரா ஈட்டி -எறிதல்
ரவி தாஹியா -மல்யுத்தம்
ஸ்ரீஜேஷ் -ஹாக்கி
லவ்லினா -குத்து சண்டை
சுனில் சேத்திரி -கால்பந்து
மிதாலி ராஜ் -கிரிக்கெட்
பிரமோத் பகத் -பேட்மிண்டன்
சுமித் -ஈட்டி எறிதல்
அவானி லெஹரா -துப்பாக்கி சுடுதல்
கிரிஷ்ண நஹர் -பேட்மிண்டன்
மணீஷ் நர்வால் -துப்பாக்கி சுடுதல்
2021-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள்;
யோகேஷ் கதுனியா (வட்டு எறிதல்)
நிஷாத் குமார் (உயரம் தாண்டுதல்)
பிரவீன் குமார் (உயரம் தாண்டுதல்)
சரத் குமார் (உயரம் தாண்டுதல்)
சுஹாஸ் LY (பேட்மிண்டன்)
சிங்ராஜ் அதானா (துப்பாக்கி சுடுதல்)
பவினா படேல் (டேபிள் டென்னிஸ்)
ஹர்விந்தர் சிங் (வில்வித்தை)
ஷிகர் தவான் (கிரிக்கெட்)
மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் 2020ல் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தேசிய ஹாக்கி அணியின் அனைத்து உறுப்பினர்களும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.