Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிரடி வீரர் கேஎல் ராகுல் மருத்துவமணையில் அனுமதி ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

2021 ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டு வரும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் கேஎல் ராகுல் அவர்களுக்கு வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியையும் அடைந்து புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. ஆனாலும் இதுவரை நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த கே எல் ராகுல் அவர்களுக்கு நேற்று முன் தினம் தீராத வயிற்றுவலி ஏற்பட்டது இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு குடல்வால்வு அழற்சி இருப்பது தெரியவந்துள்ளது இதையடுத்து அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறப்பட்டுள்ளன. ஆகையால் இவர் ஏனைய போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் தான் இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் பலர் அவர் நலமுடன் மீண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நேற்று நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இதற்கு கேஎல் ராகுல் இல்லாதது கூட பெரிய இழப்பாக தெரியும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் 58 பந்துகளில் 99 ரன்கள் குவித்து நல்ல ரன்களை எடுத்துள்ளார். டெல்லி அணியில் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி வெற்றியை பெற்றது.

Exit mobile version