கிரிக்கெட்டில் கடைசியாக 1986ல் நடந்த சம்பவம்!! அதிரடி காட்டும் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி!!

0
97
KL Rahul and Jaiswal in action

cricket: இந்திய அணியில் தற்போது கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா இரண்டாவது நாள் ஆட்டத்தில் விளையாடி வரும் நிலையில் கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஆட்டமிழக்காமல் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 172 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்த சாதனை இதற்கு முன் கடைசியாக ஸ்ரீகாந்த்-கவாஸ்கர் செய்திருந்தனர்.

இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 5 டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களில் ஆட்டமிழந்தது.தொடர்ந்து  களமிறங்கிய ஆஸ்திரேலியா 104 ரன்களில் சுருண்டது.

இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுற்ற நிலையில் தொடக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை 172 ரன்கள் விக்கெட் எதுவும் இல்லாமல் சேர்த்தனர்.

ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை 50 ஓவர் விக்கெட் இல்லாமல் தொடக்க வீரர்கள் இருவரும் அரை சதம் அடித்தது இது நான்காவது முறையாகும். இதற்கு முன் சுனில் கவாஸ்கர்(70) மற்றும் சேத்தன் சவுகான்(85) இணை 1981ல், சுனில் கவாஸ்கர்(166) மற்றும் கிரிஸ் ஸ்ரீகாந்த்(51) இணை 1985 ளும், மீண்டும் சுனில் கவாஸ்கர்(172) மற்றும் கிரிஸ் ஸ்ரீகாந்த்(116) இணை 1986 ளும் செய்த சாதனையை இந்த முறை கே எல் ராகுல் (62) மற்றும் ஜெய்ஸ்வால்(90) இணை நான்காவதாக தற்போது சமன் செய்துள்ளது.