இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தும் இந்திய அணியால் ஒரு போட்டியில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டது இந்திய அணி.
இந்த தொடரில் தல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணமாக கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருந்தனர்.முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்த இரண்டு தொடக்க வீரர்களும் ரன் குவித்து சாதனை படைத்தனர். அதன் பின் அடுத்தடுத்த போட்டிகளில் கே எல் ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்.
எனினும் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் மிகவும் தடுமாறினார். ஆனால் அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்து தொடரில் டி 20 அணியில் கே எல் ராகுலுக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓய்வு வேண்டும் என கே எல் ராகுல் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உடல் சோர்வு ஏற்பட்டதால் ஓய்வு எடுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.