இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியில் தொடக்க வீரர் குறித்து குழப்பம் எழுந்து வந்த நிலையில் கே எல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர் தான் தொடக்க வீரர் என கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் குழப்பம் நிலவி வருகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதில் 3 போட்டிகள் இதுவரை நடைபெற்று முடிந்துள்ளது. ஐந்தில் 4 போட்டிகள் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்றுள்ளது. இனி வரும் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு செல்லும்.
இந்திய அணியில் அடுத்து நடைபெற உள்ள போட்டியில் தொடக்க வீரராக ஜெயஷ்வாளுடன் ரோஹித் சர்மா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கே எல் ராகுல் மூன்றாவது வரிசையில் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் 6 வது வரிசையில் களமிறங்கி ரோஹித் சர்மாவால் ரன் குவிக்க முடியவில்லை அதனால் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். மேலும் கே எல் ராகுல் எந்த வரிசையிலும் இறங்கி விளையாடக்கூடிய வீரர். கில் வரிசை கேள்விக்குறியாகவே உள்ளது.