ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி முக்கிய வீரரான ஷுப்மன் கில் 4 வது போட்டியில் களமிறங்கவில்லை. நாளை நடைபெறவுள்ள போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ளார் இதனால் பேட்டிங் வரிசையில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்திய அணியின் முக்கிய வீரர் கே எல் ராகுல் அவர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் முக்கியமான தருணங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவர் இதுவரை 8 இன்னிங்ஸில் விளையாடி 259 ரன்கள் அடித்துள்ளார். அவரின் சராசரி 37 ஆக உள்ளது. இந்நிலையில் இவர் தொடக்கத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு போட்டிகளாக ரோஹித் மீண்டும் தொடக்கத்தில் களமிறங்கினார்.
இதனால் கே எல் ராகுல் 3 வது வீரராக களமிறங்கினார். இந்நிலையில் சுப்மன் கில் கடந்த 2 ஆண்டுகளாக 3 வது வரிசையில்தான் களமிறங்கி விளையாடி வருகிறார் இதனால் நாளை அவர் போட்டியில் மீண்டும் விளையாடினால் கே எல் ராகுல் மீண்டும் எந்த வரிசையில் களமிறங்குவார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. ரோஹித் மீண்டும் 6 வது வரிசையில் விளையாடுவாரா? கே எல் ராகுல் 6 வதாக களமிறங்குவாரா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே ரசிகர்கள் நன்றாக விளையாடி வரும் கே எல் ராகுல் வேறு வேறு வரிசை மாற்றுகிறீர்கள் அவர் பாவம் இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.