Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கே எல் ராகுல் அவுட் இல்லை!! அவசரமாக விக்கெட் கொடுத்த ஆஸ்திரேலியா அம்பயர்!!

KL Rahul is not out

KL Rahul is not out

cricket: இந்தியா ஆஸ்திரேலியா முதல் போட்டியில் கே எல் ராகுல் விக்கெட் ஒரு ஏமாற்று வேலை சமூக வலைதளங்களில் எழுந்த சர்ச்சை.

இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுலின் விக்கெட் குறித்து ஆஸ்திரேலிய அம்பயர் ஏமாற்று வேலை செய்வதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா உடன் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக கே எல் ராகுல் களமிறங்கினார்.

கே எல் ராகுல் விக்கெட்டால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அவர் விக்கெட்டானது பந்து பேட்டில் பட்டு கீப்பரிடம் கேட்ச் ஆனது அப்போது அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் கே எல் ராகுல் தந்து பேட் காலில் கட்டியிருந்த பேடில்(pad) பட்டது என உறுதியாக இருந்தார்.

ஆனால் ரிவியூ வில் காட்டப்பட்ட ரிப்ளே வில் ஸ்னிக்கொமீட்டரில் பந்து பேட்டுக்கு நேராக வரும் போது லேசான அதிர்வு ஏற்பட்டது. உடனே அவுட் கொடுத்தனர் இதை கண்டு கே எல் ராகுல் அதிர்ச்சியில் வெளியேறினார். ஆனால் பந்து பேட்டினை தாண்டும்போது பேட் அவரின் கால் பேடில் பட்டு அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதை அவுட் கொடுத்து ஆஸ்திரேலிய ஏமாற்று வேலை செய்கிறது என சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Exit mobile version