LSG அணியில் மேலும் நீடிக்க வாய்ப்பில்லை!! 2025 ஏலத்திற்க்கு செல்லும் கே எல் ராகுல்!!

0
82
KL Rahul to go to auction in 2025

IPL: LSG அணியில் கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை வருகிற 2025 ஏலத்தில் பங்கேற்கும் கே எல் ராகுல்.

LSG அணி இதுவரை 3 சீசன்களில் விளையாடியுள்ளது இந்த மூன்று சீசன்களிலும் அதிக ரன் அடித்தவர் அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல். இவர் ஐ பி எல் 2022 ல் 616 ரன்களுடன் இரண்டாவது அதிக ரன் எடுத்தவர். 2023 ம் ஆண்டு காயம் காரணமாக பாதி போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

ஆனால் 2024 ம் ஆண்டு மீண்டும் நன்றாக விளையாடி 520 ரன்களுடன் அதிக ரன் அடித்தவராக இருந்தார்.கடந்த ஐ பி எல் சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக LSG அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

KL Rahul to go to auction in 2025

KL Rahul to go to auction in 2025

இந்த தோல்விக்கு பிறகு ஆடுகளத்தில் LSG அணியின் உரிமையாளர் கோயங்காவும் கே எல் ராகுலும் பேசிய புகைப்படங்கள் வெளியாக பேசு பொருளானது. ஆனால் SRH அணியிடம் தோல்வி அடைந்த பின் கே எல் ராகுல் மதிப்பெண் சுமூகமாக இருந்ததாக LSG அணியின் உரிமையாளர் அந்த அணியிடம் கூறியதாக சொல்லபடுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற LSG உரிமையாளர்களுடன் சந்திப்பின் போது, ​​தக்கவைப்பு சலுகை வழங்கப்பட்டால், அதை ஏற்க ராகுல் உறுதி அளிக்கவில்லை என்று  அறியப்படுகிறது.சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டதாக அறியப்படுகிறது.வருகிற அக்டோபர் 31 ம் தேதி அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பிக்க வேண்டும். ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்