இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் ஆரம்பத்தில் இருந்தே தொடக்க வீரர் விவகாரம் நிகழ்ந்து வருகிறது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா இடம் பெறாததால் அவருக்கு பதிலாக கே எல் ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அணியில் இடம் பெற்ற பின்னும் அவர் 6 வதாக களமிறங்கினார்.
இந்நிலையில் 4 வது போட்டியில் தொடக்க வீரராக மீண்டும் ரோஹித் சர்மா களமிறங்கினார். ஆனால் இந்த மாற்றத்தில் எந்த பயனும் இல்லை அவர் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் அவர் மீதான விமர்சனம் அதிகரித்து வந்தது இதனால் அவர் 4வது போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
4 வது போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை. அவர் 2 வருடங்களாக 3 வது வரிசையில் மட்டும் களமிறங்கி விளையாடி வருகிறார். அதனால் அவர் மீண்டும் களமிறங்கினால் 3 வது வரிசையில் தான் களமிறங்குவார் என்பதால் தற்போது கே எல் ராகுல் 3 வதா? அல்லது கில் 3 வதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் மீண்டும் 6 வது வரிசையா? கே எல் ராகுல் 6 வது வரிசையா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.நாளை சிட்னியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 வது கடைசி போட்டி துவங்கவுள்ளது.