Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒப்பனிங் or மிடில் ஆர்டர்..பேட்டிங்கில் எந்த வரிசை !! கே எல் ராகுல் சொன்ன நச் பதில்!!

KL Rahul's Nuch answer

KL Rahul's Nuch answer

cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் கே எல் ராகுல் செய்தியாளர் சந்திப்பில் சொன்ன பேட்டிங் குறித்த அதிரடி  பதில்

இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் முதல் போட்டியில் பங்கேற்காத ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சுப்மன் கில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல் போட்டியில் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். இந்நிலையில் இரண்டாவது போட்டியில் யார் எந்த வரிசையில் களமிறங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே எல் ராகுலிடம் எந்த வரிசையில் களமிரங்குவீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அதை வெளியில் சொல்ல வேண்டாம் என கூறியுள்ளார்கள் என பதிலளித்தார். மேலும் ஓப்பனிங் அல்லது மிடில் ஆர்டர் எது உங்களுக்கு வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கே எல் ராகுல் நான் எந்த வரிசையிலும் விளையாட தயார். எனக்கு ப்ளேயிங் லெவனில் இடம் பெற வேண்டும் பெஞ்சில் இருப்பதற்கு பதிலாக நான் அணியில் ப்ளேயிங் லெவனில் விளையாட வேண்டும். முதல் முறையாக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளேன் என கூறியுள்ளார்.

Exit mobile version