வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா??

0
84

வீடு கட்டுவதற்கு முன் இதை தெரிஞ்சுக்கோங்க!! ஹவுசிங் லோன் எடுக்கலாமா??

மனிதர்கள் பலரின் பொதுவான கனவு என்னவென்றால் சொந்தமாக வீடு கட்டுவது தான். ஆனால் இப்போதுள்ள காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது வெறும் கனவாகவே உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் பொருளாதார ரீதியான வருமானம்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு நபர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார் என்றார் அது அவரின் வரவு செலவுக்கும், மருத்துவச் செலவுக்கு ,படிப்பு செலவுக்கும், போக்குவரத்து செலவுக்கும் மற்றும் சில இதர செலவுக்குமே சரியாக உள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் எவ்வாறு சேமித்து ஒரு வீட்டை கட்ட முடியும்.இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சொந்த வீடை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்று சிலர் EMI போட்டு வீட்டை கட்டுகின்றனர்.

ஆனால் அவ்வாறு கட்டிவிட்டு அதற்கு தவணை செலுத்த முடியாமல் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும் பழைய வீடு உள்ளவர்கள் அதை இடித்துவிட்டு புது வீடு கட்ட வேண்டும் ஆனால் என்னிடம் போதிய பணம் இல்லை என்றும் EMI போட்டு வீட்டை கட்டுகின்றனர்.

அப்படி அந்த EMI என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா??EMI என்பது சமமான மாதாந்திர தவணையைக் குறிக்கிறது, இது நாம் தேர்ந்தெடுத்த கடனுக்காக நாம் செய்யும் மாதாந்திரத் தொகையாகும்.

EMI கொடுப்பனவுகளில் அசல் மற்றும் கடன் தொகையின் வட்டி ஆகிய இரண்டிற்கும் பங்களிப்புகள் அடங்கும். ஆரம்ப கட்டங்களில் EMI செலுத்துதலின் பெரும்பகுதி வட்டிக் கூறுகளாகும்.

கடன் காலம் முழுவதும் நாம் முன்னேறும்போது, வட்டித் திருப்பிச் செலுத்தும் பகுதி குறைகிறது மற்றும் அசல் திருப்பிச் செலுத்துவதற்கான பங்களிப்பு அதிகரிக்கிறது.

இதில் மூன்று காரணிகள் உள்ளது.

1: கடன் தொகை- ஒருவர் வாங்கும் மொத்த தொகையையும் குறிக்கும்.

2: வட்டி வீதம்-அவர் வாங்கும் தொகை காண வட்டியை குறிக்கும்.

3: கடனின் காலம்-தொகையை முழுவதும் உரிய காலத்திற்குள் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்ற ஒப்புதலை குறிக்கிறது.

இந்த மூன்றையும் வைத்து தான் ஒருவருக்கு EMI என்கின்ற கடன் வழங்கப்படுகின்றது.

இது உங்களுக்கு லாபமாகவும் சலுகையாகவும் தெரிகிறது என்றால் உங்களுக்கு தொகையை வழங்கும் அவர்களுக்கு எவ்வளவு லாபம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே EMI போடுவதற்கு முன்பு இதைப் பற்றிய புரிதலையும் தகவல்களையும் தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.