கோலி படைத்த சாதனை… ஹர்திக் பாண்ட்யா அபத்தமான விக்கெட்- அரையிறுதிப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

0
172

கோலி படைத்த சாதனை… ஹர்திக் பாண்ட்யா அபத்தமான விக்கெட்- அரையிறுதிப் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

இந்திய அணி தற்போது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடி வருகிறது.

டி20 உலக கோப்பையில் இரண்டாவது அரையறுதி போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்கள் இழந்து 168 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் விரைவில் ஆட்டமிழந்தார்.

இந்த இக்கட்டான நிலைமையில் இருந்து இந்திய அணியை மீட்ட கோலி, 40 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.  ஆனால் அவர் எதிர்பாராத விதமாக அவுட் ஆனது ஏமாற்றமளித்தது. இந்த இன்னிங்ஸ் மூலமாக அவர் டி 20 போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்ஸ்டோனை எட்டியுள்ளார். இந்த சாதனையைப் படைக்கும் முதல் கிரிக்கெட் வீரர் கோலிதான்.

அதே போல இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா 33 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து அசத்தினார். இன்னிங்ஸின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் பேட் செய்யும் போது அவர் ஸ்டம்ப்பை ஹிட் செய்ததால் ஹிட் விக்கெட்டானார். இதனால் அந்த பவுண்டரியும் இந்திய அணியின் ரன்களில் சேர்க்கப்படவில்லை.