Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆசியக் கோப்பையில் கோலி & ரோஹித் ஷர்மா படைக்க உள்ள சாதனைகள்!

ஆசியக் கோப்பையில் கோலி & ரோஹித் ஷர்மா படைக்க உள்ள சாதனைகள்!

இன்று தொடங்கும் ஆசியக் கோப்பை தொடரில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆசியக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா கருதப்படுகிறது.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆசிய கோப்பையில் அதிக ரன் இந்திய வீரர்கள் பட்டியலில் (26 இன்னிங்சில் 883 ரன்கள்) இரண்டாவது இடத்தில் உள்ளார். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் இன்னும் 89 ரன்கள் எடுத்தால், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தலாம். அதே போல இந்த தொடரில் அவர் 1000 ரன்களைக் கடக்கவும் வாய்ப்புள்ளது. சச்சின் 931 ரன்களோடு இரண்டாம் இடத்திலும், ஜெயசூர்யா 1220 ரன்களோடு முதலிடத்திலும் உள்ளனர். அதே போல விராட் கோலி 766 ரன்களோடு உள்ளார். அவரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் 1000 ரன்கள் மைல் கல்லை எட்டலாம்.

அதே போல இந்த தொடரில் ரோஹித் ஷர்மா மேலும் 6 சிக்ஸர்கள் விளாசினால் ஆசியக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அப்ரிடியின் சாதனையை முறியடிக்கலாம். அப்ரிடி 26 சிக்ஸர்களோடு முதலிடத்தில் இருக்க, ரோஹித் ஷர்மா 21 சிக்ஸர்களோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

Exit mobile version