Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விராட் கோலியை ட்ரோல் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்… என்ன காரணம்?

விராட் கோலியை ட்ரோல் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்… என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி முன்னிலைப் பெற்றபோதும், இரண்டாவது இன்னின்ஸில் இங்கிலாந்தின் சூப்பரான இன்னிங்ஸால் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் பேர்ஸ்டொ பேட் செய்யும்போது அவருக்கும் கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோலி பேர்ஸ்டோவிடம் “வாயை மூடிக்கொண்டு போய் பேட் செய்” என்று கூறும் விதமாக சைகை செய்தார். இதையடுத்து இப்போது போட்டி முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களை ட்ரோல் செய்யும் விதமாக பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு படி மேலே சென்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் கோலியை கிண்டல் செய்து பதிவு செய்துள்ளது. இந்த பதிவுகள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.

 

Exit mobile version