Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை

பரமபதத்தில் பாம்பு கொத்தியது போல சறுக்கிய கோஹ்லி… இதுவரை இல்லாத மோசமான தரவரிசை

இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தற்போது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார்.

இந்திய அணியின் ரன் மெஷின் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இதற்கிடையில் அவர் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்ததால் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் விளையாட வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

தொடர்ந்த மோசமான ஆட்டத்தால் அவரின் சராசரியும் கீழிறங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அவரின் ஒருநாள் சராசரி கீழிறங்கியுள்ளது. இப்போது அவர் 7 ஆவது இடத்தில் உள்ளார். அவருக்கு முன்னதாக இந்திய ரோஹித் ஷர்மா 5 ஆவது இடத்தில் உள்ளார். ஷிகார் தவான் 13 ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.

Exit mobile version