Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கம்பீரை எரிச்சல் அடையச் செய்த கோஹ்லி, ரோஹித்! அப்படி என்னதான் ஆச்சு! பிசிசிஐ கூறியது என்ன? 

Kohli, Rohit made Gambhir angry! What's the matter? What did the BCCI say?

Kohli, Rohit made Gambhir angry! What's the matter? What did the BCCI say?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் அவர்கள் பரிந்துரை செய்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இருவரும் பிசிசிஐ இடம் புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் வங்கதேசம் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அடுத்து அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இந்த பத்து போட்டிகளில் ஏழு அல்லது எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இதையடுத்து அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் விதமாகவும் தயாராகும் விதமாகவும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களான ரோஹித், விராட், அஷ்வின், பும்ரா ஆகியோர் விளையாட வேண்டும் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்கள் பிசிசிஐயிடம் பரிந்துரை செய்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி துலீப் டிராபி தொடங்கவுள்ளது. இதையடுத்து இந்த துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் விதமாக சீனியர் வீரர்களான பும்ரா, ரோஹித், விராட், அஷ்வின் ஆகியோர் பயிற்சி எடுக்க வேண்டும். மேலும் இந்த துலீப் தொடரில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கவுதம் கம்பீர் அவர்கள் கூறியிருந்தார்.
இதற்கு மத்தியில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் சுற்றுலாவை ரத்து செய்து விட்டு ரோஹித் மற்றும் கோஹ்லி இருவரும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவர்களின் வேண்டுகோளுக்கு பணிந்து கலந்து கொண்டனர். இதையடுத்து ஒருநாள் தொடர் முடிந்த பின்னர் ரோஹித் மற்றும் கோஹ்லி இருவரும் மீண்டும் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு சென்று விட்டனர்.
இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதி தொடங்கவுள்ள துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்கள் விளையாட வேண்டும் என்றும் இதனால் அடுத்தடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளுக்கு நன்கு பயிற்சி பெற முடியும் என்றும் கவுதம் கம்பீர் அவர்கள் எடுத்த முடிவுக்கு ரோஹித் மற்றும் கோஹ்லி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதாவது அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் அதுவும் பெரிய டெஸ்ட் தொடர்களிலும் விளையாடவுள்ளோம். எனவே எங்களுக்கு சிறிதளவு ஓய்வு வேண்டும். ஓய்வு இருந்தால் தான் நாங்கள் சிறப்பாக விளையாட முடியும். அப்படி இல்லை என்றால் உடல் தகுதி பாதிக்கப்படும். எனவே எங்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதால் நாங்கள் துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டோம் என்று விராட் மற்றும் ரோஹித் இருவரும் பிசிசிஐயிடம் கூறியுள்ளதாக தெரிகின்றது.
இதையடுத்து சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் விராட் அவர்களின் கருத்தை பரிசீலனை செய்த பிசிசிஐ சீனியர் வீரர்கள் துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு விலக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்நிலையில் விராட் மற்றும் ரோஹித் இருவரும் தன்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்ளாமல் பிசிசிஐயிடம் முறையிட்டது தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் அவர்களை எரிச்சல் அடையச் செய்துள்ளது.
Exit mobile version