நேற்றைய போட்டியில் கோஹ்லியின் மற்றொரு சாதனையை தகர்த்த ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் விராட் கோலி. சமீபத்தில் அவரின் அந்த சாதனையை ரோஹித் ஷர்மா முந்தினார். இருவருக்கும் இடையே சிறிய அளவில்தான் ரன்கள்தான் வித்தியாசம் என்பதால் மாறிமாறி இருவரும் இந்த சாதனையைக் கடக்க வாய்ப்புள்ளது.
அதுபோலவே கோஹ்லியின் மற்றொரு சாதனையான அதிக அரைசதங்கள் என்ற சாதனையையும் சமீபத்தில் முறியடித்தார். விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் தலா 30 அரைசதங்களோடு இருந்த நிலையில் நேற்று 31 ஆவது அரைசதத்தை சேர்த்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோஹித் ஷர்மா. வரிசையாக இப்படி கோஹ்லியின் சாதனைகளை முறியடித்து இந்திய அணியின் சிறந்த டி 20 கேப்டன்களில் தோனி மற்றும் கோஹ்லிக்கு அடுத்தவராக உருவாகி வருகிறார் ரோஹித் ஷர்மா.
இந்நிலையில் இப்போது நேற்றைய போட்டியில் மற்றொரு விராட் கோஹ்லியின் சாதனையையும் முறியடித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்த ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டன்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கோஹ்லி 59 சிக்ஸர்களோடு முதலிடத்தில் இருந்தார். தற்போது 60 ஆவது சிக்ஸரை விளாசி அந்த சாதனையை தற்போது ரோஹித் ஷர்மா தன் வசப்படுத்தியுள்ளார்.