பழைய ஓய்வுதிய திட்டத்திற்கு விண்ணபிக்க கடைசிநாள் !! ஊழியர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசு!!

0
71
Last day to apply for old sabbatical scheme !! The central government warned the employees!!

பழைய ஓய்வுதிய திட்டத்திற்கு விண்ணபிக்க கடைசிநாள் !! ஊழியர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த மத்திய அரசு!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நிதி செயலாளர் தலைமையில் தேசிய ஒய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்த குழு ஒன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது.

தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில்  கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு பிரதிநிதி பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி வேறொன்றை அமைக்க ஊழியர்கள் அமைப்பு ஒப்புதல் தராது என்று குழுவிடம் தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த பிரச்சனை தீற வேண்டுமென்றால் புதிய ஓய்வூதிய திட்டமான NPS திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய திட்டத்தை நடைமுறை படுத்துவதே ஒரே  வழியாகும். இந்த நிலையில் ஊழியர்கள் தரப்பில் வெளிபடுத்தப்படும் அனைத்து விஷயங்களின் மீதும் கவனம் செலுத்தப்படும் என்று குழுத்தலைவர் உறுதியளித்தர்.

சில நாட்களுக்கு முன்பு NPS என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றம் செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது.அப்பொழுது குழு அமைப்பின் பிரதிநிதி பணியாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக பல வாதங்களை முன் வைத்தார்.

இந்த கூட்டத்தில் NPS என்ற புதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டமான OPS யை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று குழு தெரிவித்தது.

இந்த நிலையில் ஜூலை 13 ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஏஐஎஸ்  பிரிவை சேர்ந்த ஊழியர்கள் இனி பழைய ஓய்வுதிய திட்டத்திற்கு பதிலாக புதிய ஓய்வுதிய திட்டத்தை பெற்று கொள்ளலாம் என்றும் அதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

அறிவிப்பு வெளியான நாள்முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில் நவம்பர் 30 ம் தேதி கடைசி நாளாக அரசு அறிவித்துள்ளது.மேலும் சில விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் பழைய ஓய்வுதிய திட்டத்தை பெற விரும்பும் ஊழியர்கள் 2003 என்ற ஆண்டிற்கு முன்பு பணி நியமிக்கப்பட்ட ஊழியராக இருக்க வேண்டும்.இவர்கள் மட்டுமே இந்த பழைய ஓய்வுதிய திட்டத்தை பெற தகுதி உடையவர்கள் என்று அரசு அறிவித்ததுள்ளது.