Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆட்டை பிரியாணி ஆக்கிவிடுவோம்!! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி!!

Let's make goat biryani!! RS Bharati's response to Annamalai!!

Let's make goat biryani!! RS Bharati's response to Annamalai!!

ஆட்டை பிரியாணி ஆக்கிவிடுவோம்!! அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதியின் பதிலடி!!

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எதிர்கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் அவர் திரும்ப தன் ஊருக்கு வர முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிரட்டல் விடுத்திருந்தார்.

இதற்கு ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, பெங்களூருக்கு எங்கள் தளபதி வந்தால் முற்றுகை இடுவாயா? நீ ஒரு ஆண்மகனாக இருந்தால்..உனக்கு தைரியம் இருந்தால்..சோற்றில் உப்பு போட்டு நீ தின்பவராக இருந்தால் தலைவர் வரும் போது தடுத்துப்பார். பிறகு நாங்கள் என்ன செய்வோம் என்று பார்ப்பாய் என்றும், மேலும் ஆடு ஆடாக இருந்தால் வைத்திருப்போம் இல்லையெனில் பிரியாணி போட்டு விடுவோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்குமாரு பேசி உள்ளார்.

இதற்கு பதில் பேசிய அண்ணாமலை, அரசியலில் மூத்த அரசியல்வாதியாக இருந்துக்கொண்டு இவ்வாறு தரம் குறைந்து ஆர்.எஸ்.பாரதி பேசுகிறார் என்றும், மேலும் இவர் பேசும் பேச்சுக்கும் இவரின் வயதுக்கும் சம்மந்தமே இல்லை என்றும் கூறி உள்ளார்.

என்னை பிரியாணி போட்டுவிடுவேன் என்று சொன்னால் நான் பயந்து விடுவேனா? இதெல்லாம் அரிவாள் பிடித்த கை..தினமும் மரத்தை அரிவாளால் வெட்டிய கை இது மேலும் நாளை காலையிலும் இந்த அரிவாளை பிடித்து வெட்டத்தான் போகிறேன்.

அரிவாள் யார் பிடித்தாலும் வெட்ட தான் செய்யும்.. நான் பிடித்தாலும் வெட்டும் என்று ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். பயமுறுத்தி அரசியல் செய்யலாம் என்று ஆர்.எஸ்.பாரதி நினைத்தால் அது எங்களிடம் நடக்காது, மேலும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்றொரு கன்னத்தைக் காட்டுவதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றும் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version