Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாழ்நாள் சான்றுகளை உடனடியாக அளிக்க வேண்டும்!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

வாழ்நாள் சான்றுகளை உடனடியாக அளிக்க வேண்டும்!! சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!

ஒவ்வொரு வருடமும் சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்திலேயே வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

இதே போல் ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என இரண்டும் பெறுபவர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் வாழ்நாள் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டிய மாதத்தில் சான்றிதழை கொடுக்க தவறினால் ஒரு மாதம் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், அதற்குள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்கப்படவில்லை என்றால் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது இந்த ஆண்டிற்கான ஏப்ரல், மே, மற்றும் ஜூன் மாதங்களில் அளிக்கப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த மாதம் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அளிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் இந்த வாழ்நாள் சான்றுகளை அளிக்க அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை நான்கு முப்பது மணி வரை அளிக்கலாம் என்றும், இதற்கான சிறப்பு முகாம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெறும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமிற்கு ஓய்வூதிய புத்தகம் அசல், வங்கி கணக்கு புத்தகம், மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வரவேண்டும். எனவே ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் என இருவரும் வாழ்நாள் சான்றிதழ்களை அளிக்க இந்த சிறப்பு முகாமிற்கு சென்று வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exit mobile version