தந்தை, மகன் விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியல்!! இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வினும் இணைந்தார்!!
டெஸ்ட் போட்டிகளில் தந்தை மற்றும் மகன் என இருவர்களின் விக்கெட்டுகளையும் கைப்பற்றியவர்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வின் அவர்களும் இடம் பிடித்துள்ளார்.
மேற்க்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. அதில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று(ஜூலை12) தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்யும் பொழுது போட்டியின் முதல் விக்கெட்டை ரவி அஷ்வின் கைப்பற்றினார். முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் டகெனரைன் சந்திரபால் ஆவார். இவரது தந்தை ஷிவ்நைரன் சந்திரபால் அவர்களின் விக்கெட்டை 2011ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரவி அஷ்வின் அவர்கள் கைப்பற்றினார். இதன் மூலமாக தந்தை மற்றும் மகன் இருவர்களின் விக்கெட்டை கைப்பற்றிய 5வது வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ரவி அஷ்வின் படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக இயான் போதம் அவர்களும் பாகிஸ்தானை சேர்ந்த வாசிம் அக்ரம் அவர்களும் தந்தை மற்றும் மகனான லான்ஸ் மற்றும் கிறிஸ் கேரின்ஸ் விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிட்செல் ஸ்டார்க், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சைமன் ஹாரமர் இருவர்களும் தந்தை மற்றும் மகனான ஷிவ்நரைன், டக்நெரையன் ஆகியோர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். தற்பொழுது இந்தியாவை சேர்ந்த ரவி அஷ்வின் அவர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள்ர்.
இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக இந்தியாவுக்காக 700சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் ரவி அஷ்வின் படைத்துள்ளார். இந்தியாவுக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளே அவர்கள் 953 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும் 707 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்பஜன் சிங் அவர்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். தற்பொழுது ரவி அஷ்வின் அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.