Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோற்றதால் கதறி அழுத சிறுமி! அதற்காக நிதி வழங்கிய மக்கள்!

Little girl to cry because of the loss! The people who funded it!

Little girl to cry because of the loss! The people who funded it!

தோற்றதால் கதறி அழுத சிறுமி! அதற்காக நிதி வழங்கிய மக்கள்!

வீட்டில் எல்லாம் குழந்தைகள் அழுதால் நான்கு அடி தான் வைப்போம். ஆனால் புதிதாக ஒரு குழந்தை கதறி அழுதது அதற்காக சேர்ந்த நிதி 29 லட்சமாம். கால்பந்து ஆட்டத்திற்கு சென்றபோது அங்கே ஜெர்மன் தோற்றதாக ஒரு சிறுமி தேம்பி அழுதுள்ளார். அப்போது அங்கிருந்த மைதான திரைகளில் கூட இது காட்டப்பட்டது.

கடந்த 29ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணியுடன் இங்கிலாந்து அணி யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மோதியது. இவர்கள் இருவரும் பரம எதிரிகளான நிலையில் இந்த ஆட்டத்தில் நீயா நானா என்று போட்டி போட்டு விளையாடின. இதில் உள்ளூர் ரசிகர்களின் பயங்கர ஆதரவுடன் ஆக்ரோஷமாக இங்கிலாந்து அணி விளையாடியது.

ஜெர்மனியின் தடுப்பு கோட்டையை தகர்த்து எறிந்தனர். ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 2 – 0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்கு நுழைந்தது. நாக் அவுட் சுற்றின் மூலம் ஜெர்மனியை இங்கிலாந்து வீழ்த்துவது 1966 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியை காண பல பேர் கூடி இருந்த நிலையில் ஜெர்மனியைச் சேர்ந்த சிறுமி, ஜெர்மனி தோல்வி அடைந்ததால் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இது ஸ்டேடியத்தில் உள்ள அனைத்து திரைகளிலும் ஒளிபரப்பானது. இதைப்பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் பலர் இணையத்தின் மூலம் அதை கிண்டலும், கேலியும்  செய்து பதிவு  இட்டனர். இணையத்தில் இந்த சம்பவம் வைரலாக பரவிய நிலையில் அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட தொடங்கினர். இணையத்தில் இந்த சம்பவம் வைரலாக பரவிய நிலையில் அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் இணையத்தில் கருத்து மோதல்கள் பல ஏற்பட்டது. இதற்கிடையில் அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோயல் ஹுயுக்ஸ் என்பவர் 50,000 பவுண்டுகளை இலக்காக வைத்து ஆன்லைனில் நிதி திரட்ட ஆரம்பித்தார். அவர் எதிர்பார்த்ததைவிட அந்த சிறுமிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதன் மூலம் தற்போது வரை அந்த சிறுமிக்கு 28,500 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 29 லட்சம் ஆகும். இது குறித்து அவர் கூறுகையில் இங்கிலாந்தில் உள்ளவர்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை என்று அந்த சிறுமி தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும். அதற்காகவே இதை இணையத்தில் பதிவிட்டேன் என்று கூறினார்.

Exit mobile version