Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!

#image_title

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!

மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

இன்று மார்ச் 1ஆம் தேதி என்பதால், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.1118.50 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் , வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.1068.50 க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version