அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலம் நடந்து முடிந்தது. இதில் அதிக விலைக்கு எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர் கே எல் ராகுல். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்தார். இந்த முறை அவர் அந்த அணியில் இருந்து ஏலத்தில் பங்கேற்றார்.
இந்த ஏலத்தில் பங்கேற்ற போது lsg அணி ஒரு முறை கூட அவரை ஏலத்தில் வாங்க முன்வரவில்லை. மேலும் இதற்கு காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ பி எல் தொடரில் ஒரு போட்டியின் போது லக்னோ அணி உரிமையாளர் போட்டி முடிந்த பின் கே எல் ராகுலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அது வைரலாக பரவி அதிகம் பேசப்பட்டது.
இதன் காரணமாக அவர் இந்த முறை அந்த அணியை விட்டு வெளியேற முடிவு செய்ததாக கூறப்படும் நிலையில். lsg உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மனம் திறந்துள்ளார். அன்றைய போட்டி சூழலில் நான் உணர்வுபூர்வமாக இருந்தேன் அதனால் நான் அப்படி நடந்து கொண்டே ஆனால் அவர் என் குடும்பத்தில் ஒருவர் தான்.
இப்போதும் அவர் மீதான அன்பும் மரியாதையும் குறையவே இல்லை இன்னும் அவர் என் குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்கிறேன். இதுவரை அவர் 3 ஆண்டுகள் தங்கள் அணியை சிறப்பாக வழிநடத்தினர். தொடர்ச்சியாக இரண்டு சீசன் ப்ளே ஆ ஃ ப் அழைத்து சென்றார். இதற்கு முன் அவர் அணியின் கேப்டன் இப்போது வேறு அணி என்பதால் அதிகம் பேச முடியாது இனி பேச்சு வேற மாதிரி இருக்கும். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த முறை கே எல் ராகுலை டெல்லி அணி ரூ.14 கோடிக்கு வாங்கியுள்ளது.