இந்திய அணியில் நாளை நடைபெற உள்ள இந்தியா தென்னாபிரிக்கா போட்டியில் மைதானத்தின் சூழலுக்கு ஏற்ற ப்ளேயிங் லெவனில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இத்தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று இரு அணிகளும் 1-1 என்ற விகிதத்தில் சமநிலையில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் ஆட்டம் மற்றும் இரண்டாவது ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களே விக்கெட் எடுப்பதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால் மூன்றாவது போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் ஆனது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிதாக சாதகமாக இருக்காது. வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் எனவே இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணி சுழல் பந்துவீச்சாளரான ரவி பிஷ்னோய் நீக்கப்பட்டு இந்திய அணியின் பேட்டிங் முக்கியத்துவம் அறிந்து ஆல்ரவுண்டர் வேத பந்துவீச்சாளரான ரமன்தீப் சிங் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. இரண்டாவது போட்டியில் ஆவேஷ் கான் சரியாக பந்து வீசாத காரணத்தினால் அவருக்கு பதிலாக யஷ் தயாளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மூன்றாவது போட்டியில் எதிர்பார்க்கப்படும் இந்திய அணியின் பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரமன்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் யஷ் தயாள்.