“சச்சின் இல்ல… சச்சின் சார்…” இந்திய ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளான ஆஸி கிரிக்கெட் வீரர்!
ஆஸி கிரிக்கெட் அணியின் வீரர் மார்னஸ் லபுஷான் ட்வீட் ஒன்றால் இந்திய ரசிகர்களால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் ட்வீட்டை ஷேர் செய்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷாக்னே டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரசிகர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு நல்வாழ்த்துக்கள் என முன்னாள் இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டு இருந்தார்.
கடைசியாக 1998 ஆம் ஆண்டு CWGயின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருந்தது. “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டை மீண்டும் பார்ப்பதில் ஆச்சரியமாக இருக்கிறது. இது எங்களின் அழகான ஆட்டத்தை புதிய பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். @BCCIWomen’s டீமுக்கு வாழ்த்துகள்” என சச்சின் டிவீட் செய்திருந்தார்.
சச்சினின் இந்த ட்வீட்டை ரிட்வீட் செய்த லாபுஷாஷ்ன், “உங்கள் கருத்தை ஏற்கிறேன் சச்சின். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஒரு அற்புதமான தொடக்கமாக இருக்கும்” என்று கூறியிருந்தார். இந்த ட்வீட்டில் டெண்டுல்கரை வெறும் “சச்சின்” என்று அழைத்ததால் இந்திய பேட்டிங் ஜாம்பவான் மீது லாபுஷாக்னே மரியாதை காட்டவில்லை என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
அவரை “சச்சின் சார்” என்று அழைக்காததற்காக இந்தியாவில் யாரும் சச்சினை இப்படி மரியாதை இல்லாமல் அழைப்பது இல்லை என்றும் ட்வீட் செய்து வருகின்றனர்.