மூன்று வீரர்கள் சதம் அடித்த போட்டி!!! பல சாதனைகளை படைத்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!!

0
120
#image_title

மூன்று வீரர்கள் சதம் அடித்த போட்டி!!! பல சாதனைகளை படைத்து வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!!

நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்7) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பல சதானைகளை படைத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கின்றது.

நேற்று(அக்டோபர்7) டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் டிகாக், மார்க்ரம், வான் டெர் டுசேன் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதமடித்தனர். இதனால் தென்னாப்பிரிகா அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 429 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி இறுதி வரை போராடியது. இருந்தும் 44.5 ஓவர்களில் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கையில் சரித் அசலன்கா 79 ரன்களும், குசால் மென்டிஸ் 76 ரன்களும், தசன் சானகா 68 ரன்களும் சேர்த்தனர்.

இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் பல சாதனைகள் படைத்து உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று உள்ளது.

அதாவது உலகக் கோப்பை தொடரில் குறைவான பந்தில் சதம் அடித்தவர்களில் மார்க்ரம் 49 பந்துகளில் சதம் அடித்து 102 ரன்கள் சேர்த்து உலகக் கோப்பை தொடரில் குறைவான பந்துகளில் சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் ஒரு இன்னிங்ஸில் மூன்று பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த போட்டியாக இது உள்ளது. மேலும் உலகக் கோப்பை தொடரில் அதிகமாக 400ரர்களுக்கு மேல் அதிகமாக அடித்த முதல் அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர்(428ரன்கள்) அடித்த போட்டியாகவும் இலங்கை தென்னாப்பிரிக்கா போட்டி மாறியுள்ளது.