இதுக்கு ஏன் அவுட் கொடுக்கல…. நடுவரின் முடிவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

0
180

இதுக்கு ஏன் அவுட் கொடுக்கல…. நடுவரின் முடிவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டி 20 தொடர் தற்போது நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டி20 போட்டியின் போது, ​​பெர்த்தில் கேட்ச்சை பிடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன், மேத்யூ வேட் இங்கிலாந்து பவுலர் மார்க் வுட்டை தடுத்ததால் சர்ச்சை உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து நிர்னயித்த 209 ரன்களைத் துரத்திய நிலையில் 17வது ஓவரில், வேட் பேட்டில் பட்ட பந்து ஹெல்மெட் மீது பட்டு உயரே எழும்பியது. அதை கேட்ச் பிடிக்க வுட் ஓடிவந்த போது, வேட் அவரைத் தடுத்து நிறுத்தி கேட்ச்சை பிடிக்க விடாமல் செய்தார். கிரீஸை நோக்கி திரும்பி, தனது கையை நீட்டி, வூட் பந்திற்கு வரவிடாமல் தடுத்தார். இதனால் அவரால் கேட்ச் எடுக்க முடியவில்லை.

இத்தகைய செயலுக்கு நடுவர் வேட்டுக்கு அவுட் கொடுத்து வெளியே அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் நடுவர் அதை செய்யவில்லை. மேலும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லரும் விக்கெட் கேட்டு அப்பீல் செய்யவில்லை. போட்டி முடிந்த பிறகு பேசிய அவர் “நான் பந்தையே பார்த்துக் கொண்டு இருந்தததால் அங்கு நடந்தது எனக்கு தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

ஆனாலும் இந்த செயலை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேத்யு வேட் இப்படி தன்னுடைய விக்கெட்டைக் காப்பாற்றினாலும், அவரால் போட்டியில் ஆஸி. அணியை வெல்ல வைக்க முடியவில்லை.