Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விராத், ரோஹித் ஏமாற்றினாலும் சதமடித்த மயாங்க் அகர்வால்

விராத், ரோஹித் ஏமாற்றினாலும் சதமடித்த மயாங்க் அகர்வால்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்று வங்கதேசம் 150 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 63 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது

தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 6 ரன்களிலும் விராத் கோஹ்லி ரன் ஏதும் அடிக்காமலும் ஏமாற்றினாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் அருமையாக விளையாடி சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் விளையாடி வரும் ரஹானே 44 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். முன்னதாக புஜாரே அதிரடியாக 54 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச தரப்பில் அபுஜயித் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்திய அணி தற்போது 64 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 300 ரன்கள் முன்னிலை பெற்றால் டிக்ளேர் செய்துவிட வாய்ப்பு உள்ளதாகவும், இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Exit mobile version