Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“பல வீரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறார்கள்…” முன்னாள் வீரர் கடுமையான குற்றச்சாட்டு!

“பல வீரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறார்கள்…” முன்னாள் வீரர் கடுமையான குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் பிட்னெஸ் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை என மிஸ்பா உல் ஹக் குற்றம்சாட்டியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் வரும் 23 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறைப் போலவே இந்த முறையும்  முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்வதால் போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் சமீபகாலங்களில் மிகவும் மோசமாக உள்ளது. அந்த அணியின் பல வீரர்கள் கேட்சகை கோட்டை விடுவதும், பவுண்டரிக்கு செல்லும் பந்துகளை துரத்த முடியாமலும் உள்ளனர். இதுபற்றி இப்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கே கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள மிஸ்பா உல் ஹக் “நானும் வக்கார் யூனிஸ் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த போது வீரர்கள் தங்கள் உடல்தகுதியைப் பேணவேண்டும் என கடுமையாக வலியுறுத்தினோம். அதற்காக எங்கள் பதவிகள் பறிக்கப்பட்டன. ஆனாலும் எனக்கு பாகிஸ்தான் அணி குறித்த அக்கறை உள்ளது.

தற்போதுள்ள வீரர்களில் ஒருசிலர் மட்டுமே தங்கள் உடல்தகுதியை சரியாக வைத்துள்ளனர். பல வீரர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறார்கள். இது அணிக்கு நல்லதல்ல. எவ்வளவு ரன்கள் அடித்தாலும் பீல்டிங் மோசமாக இருந்தால் அது பின்னடைவுதான்” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version