இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்திய அணியானது ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 180 ரன்களில் சுருண்டது. தற்போது 117/3 ரன்களில் விளையாடி வருகிறது. இந்த போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.
இதில் இந்திய அணி செய்த தவறுகளாக முதலில் இந்திய அணி டாஸ் பவுலிங் தேர்வு செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய அணியின் சிறந்த வீரர்கள் கூட பவுன்ஸ் பந்தை சரியாக எதிர்கொள்ளவில்லை முன்னணி வீரர்களான கே எல் ராகுல், விராட் கோலி மற்றும் ரிஷப பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் பவுன்ஸ் பந்துகளில் விக்கெட்டை இழந்தனர்.
இதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பவுலிங் இந்திய அணி ஸ்டம்ப் லைனில் வீசவில்லை. முதல் போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டம்ப் லைனில் 31 சதவீதம் வீசினர். ஆனால் இந்த போட்டியில் 21 சதவீதம் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலிய அணி 127/3 என்ற நிலையில் விளையாடி வருகிறது.