இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேட்டிங் செய்யும் போது இருவரின் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்திருந்தது.
இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 79 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி தவித்து கொண்டிருந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் 100 பந்துகள் சந்தித்து போராடி வந்தார் அப்போது ஹர்ஷித் ராணா பந்து வீசினார். அதற்கு ஸ்டார்க் அருகில் வந்து உன்னை விட நான் வேகமாக வீசுவேன் என்றார்.
கடந்த ஐ பி எல் தொடரில் ஹர்ஷித் ராணா மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் ஒரே அணியில் பந்து வீசியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹர்ஷித் ராணா அடுத்து வீசிய பந்து அவரின் ஹெல்மட்டை தாக்கியது. பந்து வீசி விட்டு சிரித்தார் ஹர்ஷித் ராணா. இது போன்ற சீண்டல்கள் டெஸ்ட் போட்டிகளில் நடைபெறுவது வழக்கமான ஒன்று.