அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு மாணவி அனிதாவின் பெயர் முதல்வர் உத்தரவு
தமிழகம் முழுவதும் நீட் தேர்வு என்றாலே அணைவரின் நினைவிலும் வருவது மாணவி அனிதா தான்.
நீட் தேர்வை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அணைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அனிதாவின் மரணத்திற்கு பின்னர், பல்வேறு அரசியல் கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போது வரைபோராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில், அரியலூர் மருத்துவ கல்லூரிக்கு மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று அக்கட்சியினர் கூறி வந்தனர்.
இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் 22 கோடி ரூபாய் செலவில், அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு மாணவி அனிதாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாணவி அனிதாவின் பெயரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கானது சுமார் 850 நபர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.