உலகத்தை சுற்றி வரும் மோடி நாளை சென்னைக்கு வருகை!!ரூட் மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி?..

0
202
Modi, who is traveling around the world, will visit Chennai tomorrow!! Route change will the motorists suffer?..

உலகத்தை சுற்றி வரும் மோடி நாளை சென்னைக்கு வருகை!!ரூட் மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி?..

நாளை 44-வது உலக துரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில்  28.07.2022 மாலை நடைபெற இருக்கிறது.அந்நிகழ்ச்சியில் பிரதமர், தமிழ் நாடு கவர்னர், முதலமைச்சர், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்தச் சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள ஆர்வமாக காத்திருகின்றனர்.

எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் விரிவான போக்குவரத்து  ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் நாளை  மதியம் முதல் இரவு  மணியளவில்  ராஜா முத்தைய்யாச் சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிகிறது.

மேலும் சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையச் சாலை வழியாக அனுமதிக்கப்படஇயலாது.இவ்வாறே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து இராஜா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு, நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் மாற்றி விடப்படும். இவ்வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மத்திய ரயில் நிலையத்திற்கு நாளை வரவேண்டிய பொதுமக்கள் அனைவரும் பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.