பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதின் எதிரொலி! சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்ட முக்கிய வீரர்!

0
143

துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, இந்த போட்டியில் 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்களை வாரி வழங்கி இருக்கும் முகமது ஷமியை குறிவைத்து சமூக வலைதளங்களில் தாக்கி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், முகமது ஷமிக்கு ஆதரவாக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய வலைப்பதிவில் முகமது ஷமி நாங்கள் எல்லோரும் உங்களுடன் இருக்கின்றோம் இந்த மனிதர்கள் யாருக்கும் அன்பை கொடுக்காததால் அவர்கள் வெறுப்பால் நிரம்பி உள்ளார்கள் அவர்களை மன்னித்து விடுங்கள் என பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருக்கும் கருத்தில், இந்திய அணியை ஆதரிக்கிறோம் என்றால் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களையும் ஆதரிக்கவேண்டும். முகமது ஷமி உலகத்தரமான பந்துவீச்சாளர் அந்த நாள் சமிக்கு மோசமான நாளாக இருந்துவிட்டது. முகமது சமி இந்திய அணிக்கு பின்னால் நிற்கின்றேன் என தெரிவித்திருக்கிறார். அதேபோல ஷேவாக் தெரிவித்திருப்பதாவது, முகமது ஷமி மீது நடத்தப்படும் சமூகவலைதள தாக்குதல் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் ஒரு சாம்பியன் வீரர் யார் ஒருவர் இந்திய அணியின் தொப்பியை தங்களுடைய தலையின் மீது வைத்திருக்கிறார்களோ அவர்கள் இந்திய நாட்டை தங்கள் இதயத்தில் ஏந்தி இருக்கிறார்கள் என்று அர்த்தம். சமூகவலைதள கும்பலை விடவும் அவர்களுக்கு தேசப்பற்று அதிகம் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் ஷமி என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் பதான் தெரிவித்திருப்பதாவது, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய அணியில் நானும் இருந்திருக்கின்றேன் அப்போதும் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கிறது. ஆனால் என்னை நீங்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என யாரும் தெரிவித்தது இல்லை. நான் சொல்வது ஒரு சில வருடங்களுக்கு முந்தைய இந்தியாவை, இதுபோன்ற முட்டாள் தானங்கள் நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும் என கூறியிருக்கிறார். இவர்களைப் போல பல முன்னாள் வீரர்கள் இந்திய வீரர் முகமது ஷமி அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.