நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள்… ஆஸி அணியை மிரட்டிய ஷமியின் வேகம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலி, ஷமி போன்றவர்கள் இன்னும் போட்டிகளில் விளையாடவில்லை.
இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இந்திய அணி 6 விக்கெட்கள் இழந்து 186 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் இலக்கை துரத்திய ஆஸி அணி 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் ஆஸி அணிக்கு இறுதி ஓவரில், 9 ரன்கள் மட்டுமே தேவைப்படட்து. இறுதி ஓவரை வீசிய ஷமி வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து கடைசி 4 பந்துகளிலும் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பூம்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இணைந்துள்ள ஷமி சிறப்பாக பந்து வீசி இருப்பதால் இந்திய அணியின் பந்துவீச்சு பற்றிய கவலைக் குறைந்துள்ளது.