தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

0
110
More heat will rise in Tamil!! Meteorological Department Announcement!!

தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த வாரம் புதன் கிழமை வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையான 38  டிகிரி முதல் 40  டிகிரியாக அதிகரிக்கக்கூடும்.

ஓரிரு இடங்களில் இயல்பான வெப்பத்தை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மூடியபடி காட்சியளிக்கும். நகரின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 37  டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். அதேப்போல, குறைந்தபட்ச வெப்பநிலையாக 28  டிகிரி முதல் 29  டிகிரி செல்சியஸாக பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிகப்படியான வெப்பம் மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனவே, மக்கள் யாரும் தேவைப்படும் நேரத்திற்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த வாரத்தில் நாட்டில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.